அரவக்குறிச்சியில் கலைக்கல்லூரி...! செந்தில் பாலாஜி வாக்குறுதி - திமுக
கரூர்: அரவக்குறிச்சியில் புதிய கலைக்கல்லூரி கட்டப்படும் என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அத்தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடையே பேசுகையில், ”திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பழைய கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
- அத்துடன் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் விவசாயப் பொருட்களை பதப்படுத்துவதற்கு குளிரூட்டப்பட்ட பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
- கிராமப்புற மாணவர்கள் நெடுந்தூரம் சென்று மேற்படிப்பு படிக்கும் சூழல் உள்ளது. எனவே அரவக்குறிச்சி பகுதியில் கலைக்கல்லூரி அமைத்து தரப்படும்.
- மலைக்கோவில் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மூடப்பட்ட பஞ்சாலை கிடங்கு பகுதியில், புதிய தொழிற்சாலை அமைத்து ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்றார்.