திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, இன்று கரூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 115க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், 5000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்ச்சியின்போது கரூர் மக்களின் நலனுக்காக www.hopeofkarur.com என்ற புதிய இணையதளத்தை வேலை வாய்ப்பு முகாமில் தனது பெற்றோருடன் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி, எம்சிஏ பட்டதாரி பானுமதியை வைத்து செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
இதில் கரூர் மாவட்டத்தை, முதன்மையான மாவட்டமாக உருவாக்க மகளிர் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு, இளைஞர்களின் நலம், கல்வி உதவி கோருவோர் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை இந்த இணையதளத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.