தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல்!

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

14 லட்சம் ரூபாய் பறிமுதல்
14 லட்சம் ரூபாய் பறிமுதல்

By

Published : Mar 11, 2021, 8:54 PM IST

சேலம்: சூரமங்கலம் வருவாய் வட்டார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சேலம் இரும்பாலை சாலையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.14 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அலுவலர்கள் நடத்திய விசாரணையில், நெத்திமேடு சேர்ந்த எண்ணெய் ஆலை உரிமையாளர் கவின்ராஜ் வங்கியில் செலுத்துவதற்காக அந்த பணத்தைக் கொண்டு சென்றதாக கூறியுள்ளார். இருப்பினும், கவின்ராஜ் கொண்டு வந்த தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், ரூ.14 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கருவூலத்திலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details