தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் நல்லதைக் கண்டுகொள்வதில்லை- சீமான் வேதனை

கரூர்: மக்கள் எப்போதும் நல்லதைக் கண்டுகொள்வதே இல்லை என்று வேதனை தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்கள் கண்டுகொண்டிருந்தால் அவர்களுக்கு பைபிள், குரான், பகவத்கீதை எதற்கு என கேள்வியெழுப்பியுள்ளார்.

seeman

By

Published : May 15, 2019, 8:53 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் என்பவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், "கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீரென அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஜெயலலிதா,கருணாநிதி இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

மக்கள் எப்போதும் நல்லதைக் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் கண்டுகொண்டிருந்தால், அவர்களுக்கு பைபிள், குரான், பகவத்கீதை தேவைப்பட்டிருக்காது.

சீமான்

ஓட்டுக்கு ஒருவருக்கு 5,000 என்றால் நான்கு லட்சம் பேருக்கு எவ்வளவு என்று எண்ணி முடிப்பதற்குள் நாம் அனைவரும் இறந்து விடுவோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details