கரூரில் நேற்று (ஜூன் 7) பேருந்து நிலையம் முன்பு முருகநாதபுரம் வீதியில் கடைகளை திறந்து வியாபாரிகள் விற்பனையை தொடங்கியதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு செல்ல தொடங்கினர்.
இதையடுத்து அப்பகுதிக்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து நகராட்சி அலுவலர்கள் நேற்று அடைத்தனர்.
ஊரடங்கு விதி மீறல் - 150 கடைகளுக்கு சீல்! கரூரில் 150 கடைகளுக்கு சீல் வைத்தனர் அலுவலர்கள் கடைகளுக்கு சீல்
இந்நிலையில் இன்று (ஜூன் 8) காலை முதலே அந்தத் தடுப்புகளை மீறி கடையை திறந்து பின்பக்கமாக வியாபாரம் செய்து வருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அலுவலர்கள், சுமார் 150 கடைகளுக்கு சீல் வைத்தனர்.