கரூர் மாவட்டம் குளித்தலை சட்டபேரவை தொகுதிக்குள்பட்டது வெள்ளப்பட்டி கிராமம். இங்கு தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையிலான குழு வாகன தணிக்கை மேற்கொண்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் உரிய ஆவணங்களின்றி பணம் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
ரூ.1.29 லட்சம் மதிப்பிலான ஆவணமில்லா பணம் பறிமுதல் - election flying squad confiscates 1 29 lakhs money
கரூர்: உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 1.29 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை
அவரிடம் நடத்திய விசாரணையில், அந்நபர் கள்ளை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடமிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பணத்தைக் கைப்பற்றிய தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர் கலியமூர்த்தியிடம் அதை ஒப்படைத்தார்.
இதையும் படிங்க:என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் - அமைச்சர் ஜெயக்குமார்