கரூரை அடுத்த தான்தோன்றி மலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (ஏப்ரல்16) ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், இன்று (ஏப்ரல் 17) காலை வழக்கம்போல கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
செல்போன் கடையில் லேப் டாப், ரூ. 9000 கொள்ளை
கரூர் அருகே பூட்டிய செல்போன் கடையில், லேப் டாப் விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் பூட்டிய செல்போன் கடையில் கொள்ளை
உள்ளே சென்று பார்த்த போது, மூன்று விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப், ரூ 9 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!