நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதிலிருந்து 50 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்புவது நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கரோனா : நம்பிக்கை அளிக்கும் விதமாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! - karur district news update
கரூர்: கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் உள்பட 80 நபர்களில் 67 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மீதம் உள்ள 13 பேருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடிமராமத்து பணி: ஸ்டாலினுக்கு புள்ளி விவரத்துடன் பதிலளித்த அமைச்சர்