கரூர்:நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பதியப்பட்ட தேசவிரோத வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகிலன், ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தமிழ்நாடு அரசிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
அப்போது ஆணையத்தின் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த், ஜக்கி வாசுதேவ், அன்றைய இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை அழைத்து விசாரிக்காதது வருத்தமளிக்கிறது.
ஏனெனில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னால் ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னணியில் உள்ளது என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு மேலும் சில ஆதாரங்களை ஆணையத்தில் வழங்கியிருக்க வாய்ப்பு இருந்தது. தமிழ்நாட்டின் மீது பற்றுள்ள ராகுல்காந்தி இனியாவது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டார்கள் என்ற உண்மையை வெளியே கூற வேண்டும்.
13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் எதிர்வரும் மே 22ஆம் தேதி ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையிலாவது தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறையுள்ள ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்கள் மீது மதிப்பு, மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும் இறந்தவரின் உயிர்த் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேட்டி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் பின்னால் இயங்கியவர்கள் குறித்து கிடைத்த செய்தியை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டினை நடத்திய காவலர்களே சாட்சியாளர்களா..? - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு