கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிக அருகில் உள்ள கிராமம்ஏமூர் புதூர் காலனி.இந்த கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் தம்பிதுரை வந்தார். அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் தட்டுப்பாடு, பேருந்து வசதிகள் ஏன் செய்துகொடுக்கவில்லை என தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பினர்.
ஓட்டுப்போட்டா போடுங்க போடாட்டி போங்க: தம்பிதுரை அதிர்ச்சி பேச்சு - தம்பிதுரை
கரூர்: அடிப்படை வசதிகள் ஏன் செய்துகொடுக்கவில்லை என தம்பிதுரையிடம் கேட்ட பொதுமக்களிடம் "ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க" என அவர் கூறியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பிதுரை
இதனால் ஆத்திரமடைந்த தம்பிதுரை ”நீங்க ஓட்டு போட்டால் போடுங்க போடாட்டி போங்க” என்று அவர் கூறியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் என்ன செய்தனர் என பதில் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. தம்பிதுரையின் இந்தப் பேச்சால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.