தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அதிக வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெறுவார்’ - செந்தில் பாலாஜி வெற்றி பெறுவார்

கரூர்: வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான் என அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘அதிக வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெறுவார்’ - பொன்முடி

By

Published : Apr 24, 2019, 6:04 PM IST

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பணிமனை திறந்துவைத்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நிகழ்ச்சியில் கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகையில்,

‘திமுக கூட்டணி சார்பில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் வேட்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார்.

இத்தேர்தல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய தேர்தலாகும். தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி கவிழும். ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது’ என்று கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details