தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் - கரூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமத்துவப் பொங்கல்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா ...  pongal celeberation in all over school and college  சமத்துவப் பொங்கல் விழா  அம்மாபேட்டை  காடம்பாடி தனியார் பள்ளி பொங்கல் விழா  அரவக்குறிச்சி வட்டாட்சியர் பொங்கல் விழா  கரூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமத்துவப் பொங்கல்  என்.எஸ். பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா
சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

By

Published : Jan 14, 2020, 11:30 PM IST

தமிழர்களின் பண்பாட்டோடும் கலாசாரத்தோடும் தொடர்புடைய முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் திருவிழா நாளை தமிழ்நாடு முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பொங்கலை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சமத்துவப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

சேலம் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், கோலம் போடுதல், பானையில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாகை

காடம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறைப்படி சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அறுவடை நெல், கரும்பு, உள்ளிட்ட பொருள்களை வைத்துக் கொண்டாடிய மாணவர்கள் பொங்கல் பொங்கி வரும்போது குலவையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், கும்மியாட்டம், ஆசிரியர்களின் நடனம், உறியடித்தல், கும்மிபாட்டு போன்றவை காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

கரூர்

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமத்துவப் பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா தலைமையேற்று வழிநடத்தினார். தமிழர் பாரம்பரிய உடையான மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து கொண்டும் மாணவிகள் சேலை அணிந்துகொண்டும் விழாவில் பங்கேற்றனர்.

கரூர் மருத்துவக்கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

இதேபோல், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில், வட்டாட்சியர் செந்தில் கலந்துகொண்டு வருவாய் துறையினருக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

தேனி

தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் உள்ள என்.எஸ். பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாணவியர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில், சாதி, மதம், இனப்பாகுபாடின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவிகள் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

தேனி பெண்கள் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

இவ்விழாவில், கயிறு இழுக்கும் போட்டி, வண்ண கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் ஊழியர்களை தாக்கிய ஹைதராபாத் தம்பதியினர் கைது

ABOUT THE AUTHOR

...view details