கரூரில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு - கரூர் மக்களவைத் தொகுதி
கரூர்: தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்று அஞ்சல் வாக்கு மையத்தில் வாக்களித்தனர். மேலும், தேர்தல் அலுவலர் அன்பழகன் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் உள்ளிட்ட பொருத்தும் பணியை நேரில் சென்று பார்வையிட்டார்.
கரூரில் தேர்தல் அலுவலர் அன்பழகன் ஆய்வு
கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள ஆயுதப் படைப்பிரிவு அலுவலகத்தில் இன்று கரூர் மக்கவைத் தொகுதி உட்பட்ட அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 800-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் இன்று அஞ்சல் வாக்கு மையத்தில் வாக்களித்தனர்.