தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்கு ஆதரவாக காவல் துறை இருக்கிறது: செந்தில் பாலாஜி - போலீஸ் அரசுக்கு ஆதரவளிக்கிறது

கரூர்: ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காமல் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

senthil balaji

By

Published : Sep 14, 2019, 7:15 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து அமராவதி நீரில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் கடைமடைவரை வராததை கண்டித்து வருகின்றனர். மேலும் அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதியில் மீண்டும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னப் ஆர்ப்பாட்டம் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறுகையில், "அமராவதி ஆற்று குடிநீர் பொதுமக்களின் பிரச்னை. ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் இரு முறை மனுக்கள் அளித்தும் ஒருமுறை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய சின்னதரம் பகுதியில் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. ஆனால் அணையில் 84 கன அடி தண்ணீர் இருக்கின்றது. அதனை திறந்தால் கரூர் மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் வர இயலும்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுப்பது ஏன்? இதற்கு முன்னதாக இப்பகுதியில் பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. அதனால் எங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அனுமதிக்காக நாங்கள் காவல் துறையை அணுகினோம் ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. அதனை மறுத்து கடிதமும் தரவில்லை. அதனால் அனுமதி தந்ததாக எடுத்து நாங்கள் குளத்தை தூர்வார தயாராகிவிட்டோம். இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details