தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் - சட்டம் நிறைவேற்றக்கோரி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு!

பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க. சுரேஷ் தலைமையில் வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டில் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தர தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் மூலம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கோரிக்கை மனு பதிவு தபால் அஞ்சலில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

Etv Bharat முதலமைச்சருக்கு கோரிக்கை மனு
Etv Bharat முதலமைச்சருக்கு கோரிக்கை மனு

By

Published : Apr 17, 2023, 3:41 PM IST

முதலமைச்சருக்கு கோரிக்கை மனு

கரூர்:தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவால், தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் நடப்பாண்டில் பாதிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 2023-24ஆம் கல்வி ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நியாயமான கோரிக்கையான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கிடைக்க தமிழ்நாடு அரசு மே 31ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் உரிய சட்டம் இயற்றி, வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு MBC (V)ல் வழங்கக் கோரி, கரூர் கடை வீதியில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் முதல் கட்டமாக 500 கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, கரூர் மேற்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ''தமிழ்நாட்டில் கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்திற்கு 1987ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய சமூக நீதி இட ஒதுக்கீடு கோரிக்கை போராட்டத்தில், 21 பேர் உயிர்த்தியாகம் செய்து லட்சக்கணக்கானோர் சிறைக்குச் சென்றனர்.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இவற்றில், தற்போது மூன்று முதல் நான்கு விழுக்காடு மட்டுமே நேரடியாக வன்னியர் சமூகத்தினர் பயனடைந்து வரும் சூழல் உள்ளது. எனவே கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவைச் சட்டம் நிறைவேற்றியது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் தரவுகள் அடிப்படையில் மீண்டும் வன்னியர் சமூகத்திற்குள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வன்னியர் சமூக உள் ஒதுக்கீடு 10.5 விழுக்காட்டை நடைமுறைப்படுத்தாத காரணத்தினால், கல்வி வேலைவாய்ப்பில் பயன் அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே, நடப்புக் கல்வி ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவம், கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன் மே 31ஆம் தேதிக்குள், தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டில் மீண்டும் வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தும் சட்ட வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பேரணியில் மயங்கி விழுந்த இந்து முன்னணி நிர்வாகி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details