கரூர் அரசு காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு மோகனூர் செல்லும் பிரதான சாலையின் அருகே குப்பைக்கிடங்கு உள்ளதால் அப்பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான குப்பை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகள் மேலே மூடாமல் பிரதான சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் மேல் குப்பைகள் பறந்து வந்து விழுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று அரசு காலனி பகுதியில் குப்பை கிடங்கிற்கு சென்று கொண்டிருந்த நான்கு நகராட்சி குப்பை வண்டிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குப்பை லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் - public protest
கரூர்: நகராட்சிக்கு சொந்தமான நான்கு குப்பை லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பை லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.