கரூர்: தான்தோன்றிமலையை அடுத்த வெங்கட்கல்பட்டி பகுதியில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நெடுஞ்சாலையில் வரும் கனரக வாகனங்கள் கரூர் நகருக்குள் செல்வதற்காக இப்பகுதிக்கு வருவதால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று (ஆக.4) வெங்கட் திருமா நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இணைந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.