கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் தென்னவன் (31), மாரியப்பன் (56), முருகன் (40), சுப்பிரமணியம் (40), சுப்ரமணி (31), சிவசாமி (26) ஆகிய ஆறு பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது: காவல்துறை அதிரடி! - கைது
கரூர்: சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினையும், 52 சீட்டுக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், “சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.