கரூர்: புகழூர் ஈ.ஐ.டி., பாரிஸ் சர்க்கரை ஆலையின் பணிமனை பிரிவில் உதவியாளராக பணி புரிந்து வந்த சீனிவாசன்(55) கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சர்க்கரை ஆலை ஊழியர் மரணம்! - parrys sugar factory employee died in corona
சர்க்கரை ஆலையில் உதவியாளராகப் பணியாற்றி வந்த தொழிலாளி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
parrys sugar factory employee died in corona
புகழூர் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து பேர் குணமடைந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள எட்டு பேரில், கடந்த 5 நாட்களாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன்(55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் சக தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.