கரூர்:வெளி மாநில தொழிலாளர்களால் உள்ளூர் தொழிலாளர்கள் வருவாய் இழந்து வருவதாக தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் அசோசியேசன் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார் . தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்ட் அசோசியேசனின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது .
அதில் தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும். பெயிண்டிங் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.