தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'துரோகத்தை பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை..!' - செந்தில்பாலாஜி சாடல் - bielection

கரூர்: "துரோகத்தைப் பற்றி பேச பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு அருகதையே இல்லை" என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி

By

Published : May 6, 2019, 6:22 AM IST

அரவக்குறிச்சி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொள்வது ஒட்டி திமுகவினர் பரப்புரைக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அனுமதி மறுத்தது.

இது குறித்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய வரும் நாளில் எந்த கட்சியினரும் பரப்புரை செய்யக் கூடாது என தேர்தல் ஆணையமும் போலீசாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அராஜகப்போக்கை மேற்கொண்டு வருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும்போது சோப்பு நுரை வருகிறது என்று பேசியவர் அமைச்சர் கருப்பண்ணன். அந்த அளவிற்கு அவர் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் தொகுதியில் பரப்புரைக்காக அதிமுகவினர் சென்றபோது மக்கள் யாரும் வரவேற்கவில்லை.

இந்தத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்து விடும் என்பதை தெரிந்துகொண்டு விரக்தியில் பேசுகிறார்கள். மோடியின் அடிமை அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பதவி பணத்தை காப்பாற்றிக் கொள்ள வாரணாசி சென்று மோடிக்கு சல்யூட் அடிப்பார்கள். இவர்களைப்போல அடிமையான ஆட்டு மந்தைகளாக நான் இருக்க வேண்டுமென எனக்கு அவசியமில்லை. துரோகத்தைப் பற்றி பேச பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு அருகதையே இல்லை", என்றார்.

செந்தில்பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details