நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். வழக்கம்போல இந்தாண்டும் பாத யாத்திரையாக மோகனூர் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 6 மணிக்கு பழனிக்கு புறப்பட்டனர்.
யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றொரு வாகனத்தில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்துள்ளனர். கரூர் காக்காவாடி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி அருகே அந்த வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி பக்தர்களுக்கு பிஸ்கெட்கள் வழங்கியுள்ளனர். அப்போது ஓசூரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று பக்தர்களின் வாகனமான வேன் மீது பின்புறமாக மோதியது.