கரூர்:குளித்தலை வட்டம் சின்னயம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாநாயக்கர் (55). இவருக்கும், இவரது சகோதரர் பொம்மாநாயக்கருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 6) கிருஷ்ணாநாயக்கர் பொம்மாநாயக்கர் குடும்பத்தினரிடையே நிலப்பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை தடுக்க முயன்ற கிருஷ்ணாநாயக்கரின் மூத்த சகோதரியின் கணவர் காமாநாயக்கரை (75) மோதலில் ஈடுபட்ட நபர்கள் தலையில் தடியைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இப்பிரச்சினையில் கிருஷ்ணாநாயக்கர், அவரது மகன் சின்னச்சாமி (27) ஆகிய இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.