கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஊழியர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி, அங்கு பணிபுரியும் செவிலியர்கள், இன்று காலை முதல் மருத்துவமனை முன்பாக அமர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சுழற்சி முறையில் செவிலியரை நியமிக்கப்பட வேண்டும். அனைத்து நோயாளிகள் பிரிவிலும் செவிலியருக்கான கழிப்பிட வசதிகள் செய்து தரவேண்டும். ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள ரத்தப் பரிசோதனை ஆய்வக நிபுணர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.