தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நொய்யல் வாய்க்காலில் செல்லும் சாயக்கழிவுகள்: இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசனை! - நொய்யல் வாய்க்கால்

கரூர்: வாங்கல் அருகே நொய்யல் வாய்க்காலில் செல்லும் சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நொய்யல் வாய்க்காலில் செல்லும் சாயக் கழிவுகள்: இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசனை!
Farmers meeting

By

Published : Oct 27, 2020, 3:14 PM IST

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம், நொய்யல் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலத்திற்கு, இழப்பீட்டுத் தொகை பெறுவது சம்பந்தமாகப் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நொய்யல் வாய்க்கால் பாசன விவசாய சங்கத் தலைவர் மலையப்பசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு அதிகப்படியான இழப்பீடு பெறுவது குறித்து முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details