தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவிலேயே உயிரிழந்த குழந்தை - உறவினர்கள் ஆர்ப்பாட்டம் - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டடதாகத் தெரிவித்து பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Negligence of physicians; Dead in the mother's womb!
Negligence of physicians; Dead in the mother's womb!

By

Published : Sep 30, 2020, 10:27 PM IST

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த பெரியவள்ளி பாளையத்தைச் சேர்ந்த தம்பதியர் கிருஷ்ணன்-சரஸ்வதி (வயது 32). முன்னதாக, கடந்த 24ஆம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரஸ்வதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு குறைவாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததன் காரணமாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டிய குழந்தை, வயிற்றிலேயே இறந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தினால் தான் குழந்தை வயிற்றிலேயே இறந்தது எனக் குற்றம் சாட்டி, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கார் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details