கரூர் : அகில இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வைகை ரவி தலைமையில் கரூர் தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:
"பனைமரம் ஏறும் தொழில் நசிந்து வருகிறது. அனைத்து தொழில்களையும் பாதுகாப்பது போல பனைத் தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பனைத் தொழிலை பாதுகாக்க கள் இறக்கி விற்பதற்கு அனுமதி அளிக்கவேண்டும். டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்வதைப் போல அரசு மதுபான கடைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கள் விற்பனையை தொடங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
தனி இடஒதுக்கீடு
இதேபோல தமிழகம் முழுவதும் நாடார் சமூகத்தினர் 15 % வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு 15 விழுக்காடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 234 தொகுதிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதனை அரசியல் கட்சிகள் ஏற்று உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
பனை வாரியம்