இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், ”கபில் குமார் சரத்கர் முன்னதாக திருநெல்வேலி மாவட்ட முன்னாள் டிஐஜியாக இருந்தபொழுது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்களை சுட்டுக் கொல்ல அனுமதி அளித்துள்ளார். மேலும் பத்து நிமிடங்கள் கழித்து ஸ்டெர்லைட் உதவியாளர்களுடன் காவல் துறை இணைந்து சிசிடிவி போன்றவற்றை அடித்து நொறுக்கிய காட்சிகளை 45 நிமிட ஆவணப்படமாக எடுத்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் சமர்ப்பித்துள்ளோம். அவருடன் தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் இணைந்து துப்பாக்கிச் சூடு அனுமதி அளித்துள்ளார். இருவரும் வடநாட்டு காவல் துறையினர்.
கபில் குமாரை சிறையில் அடைக்கும்வரை போராட்டம்: முகிலன் - முகிலன்
கரூர்: சென்னை மாநகர வடக்கு இணை ஆணையர் கபில் குமாரை சிறையில் அடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியுள்ளார்.
அதேபோல் மறுபடியும் தற்பொழுது கபில் குமார் சரத்கர் தடியடி நடத்தியுள்ளார். நவம்பர் மாதம் ஒரு நபர் ஆணையத்தின் மூலம் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன்பு ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தோம். அதில் ஏதேனும் தவறு இருப்பின் சாட்சிய சட்டம் 101, 105 பிரிவின் கீழ் என்னை தூக்கிலிடுங்கள் எனக் கூறியிருந்தேன். கபில் குமார் தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியிருக்கிறார். அவர் ஒரு நிமிடம் கூட பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும்” என்றார்.