தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நேற்று சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமானோர் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதாலும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால், பொதுமக்கள் செல்வதற்கு போதுமான பேருந்துகள் இல்லாததால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களை சமாளிக்க சிரமம் ஏற்பட்டது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: தேர்தலுக்காக மக்கள் ஊருக்கு சென்றபோது அவர்களை சமாளிக்க சிரமம் ஏற்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
mr vijayabaskar
இந்நிலையில், கரூரில் வாக்களித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகமாக வந்துவிட்டார்கள். சிறிது நேரம் அந்த பிரச்னை இருந்தது. அனைவரும் ஒரேநேரத்தில் சொந்த ஊருக்கு சென்றதால் பிரச்னை இருந்தது. தீபாவளி, பொங்கல் என்றால் முன்னரே திட்டமிட்டு செயல்படுவோம். ஆனால் தற்போது அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வந்துவிட்டதால் அதை சமாளிக்க சிறிது சிரமம் ஏற்பட்டது” என்றார்.
Last Updated : Apr 18, 2019, 11:23 AM IST