தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போக்குவரத்து அமைச்சர் கூசாமல் பொய் பேசுகிறார்'- ஜோதிமணி

நான் கொண்டு வந்த மேம்பாலத் திட்டத்தை தான் கொண்டுவந்ததாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூசாமல் பொய் பேசுகிறார் என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.

jothi mani m r vijayabaskar
'போக்குவரத்து அமைச்சர் கூசமால் பொய் பேசுகிறார்'- ஜோதிமணி எம்பி தாக்கு

By

Published : Oct 11, 2020, 3:40 AM IST

கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி அதிமுக முயற்சியில் கொண்டுவந்துள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, " போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுவது பொய்யான தகவல்.

இந்தப் பாலம் தேவை குறித்து 18.09.2019 அன்று மக்களவையில் அவசர விதி எண் 377இல் பேசியுள்ளேன். 19.09.2019 அன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசி கடிதம் அளித்துள்ளேன். 23.09.2019 அன்று மூன்றாவது முறையாக மக்களவையில் பேசினேன்.

'போக்குவரத்து அமைச்சர் கூசாமல் பொய் பேசுகிறார்'- ஜோதிமணி எம்பி தாக்கு
நாடாளுமன்ற விதி 377ன் கீழ் கரூர் தொகுதிக்கு உயர்மட்ட பாலம் தேவை குறித்து பேசியதன் அடிப்படையில்தான் மத்திய அரசு இந்தப் பாலத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது.
அதற்கான கடிதம் என்னிடம் உள்ளது. அதை தற்போது வெளியிட்டு உள்ளேன். இதேபோல் கடிதத்தை முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர இருவரும் ஒரு மணி நேரத்தில் வெளியிட தயாரா? அப்படி அவர்கள் வெளியிட்டு விட்டால் நான் பதவி விலக தயார்" என்றார்.

மேலும், அவரவர் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள்தான் பெயர் வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "கரூர் எம்பியாக நான் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் எனது முயற்சியில் இந்த நான்கு உயர்மட்ட பாலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகள் எம்பியாக இருந்த தம்பிதுரை கரூர் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்" எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:கரூர் சட்டப்பேரவை தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி

ABOUT THE AUTHOR

...view details