கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வழியாம்புதூரைச் சேர்ந்த ராம்குமார், ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி (25) என்ற மனைவியும், அஸ்வின் (2) மற்றும் 6 மாதத்தில் நித்தின் என்ற குழந்தையும் இருந்தனர்.
குறைந்த வருமானம் கொண்ட ராம் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், தினசரி குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. கணவரை திருத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் பலமுறை அபர்ணா தேவி எடுத்துக்கூறியும் ராம்குமார் திருந்தாமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.