தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை! - கிணற்றில் குதித்து தாய் மகன் தற்கொலை

கரூரில் தனது 4 வயது மகனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் கிடைக்காத விரக்தியில் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

By

Published : May 22, 2022, 7:34 PM IST

கரூர்: கோடங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரது மனைவி முத்துலட்சுமி (32). இவர்களது மகன் கணீஷ்குமார் (4) கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக மதுரையிலுள்ள கண் சிகிச்சை மையத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் சிறுவனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவச்செலவிற்காக 2 லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்கு உறவினர்கள் தெரிந்தவர்களிடம் என பலரிடமும் உதவி கேட்டுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து இரவு வீட்டில் உள்ளவர்கள் தூங்கியதும் முத்துலட்சுமி மற்றும் மகன் கணீஷ்குமார் இருவரும் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். கிணற்றில் குதித்த சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் முத்துலட்சுமியின் உடலையும், (துப்பட்டாவில் கட்டப்பட்ட நிலையில்) 4 வயது சிறுவன் கணீஷ்குமாரையும் சடலமாக கண்டெடுத்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் துறையினர், அவர்களது உடல்களை மீட்ட உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 வயது மகனுக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் கிடைக்காத விரக்தியில் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பெண்ணைக் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details