கரூர்:தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இரவு கலந்துகொண்டார்.
வாங்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழா நேற்றிலிருந்து தமிழக மக்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. ஏனெனில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பெருமளவிலான மக்கள் குவிந்திருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.