money-lending-gang-sexual-harassed-woman-in-karur கரூர்:கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில், ரூபாய் 30,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை ரூபாய் 12000 முன் பணம் செலுத்தி வாங்கியுள்ளார்.
மீதமுள்ள தொகையை 10 மாத தவணையில் செலுத்துவதாக, இருசக்கர வாகனம் பெற்று முறையாக 8 மாதங்கள் செலுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு தவணைகளை வசூல் செய்வதாக கூறி நேற்று (நவ.28) பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் கதிர்வேல்.
அடியாட்களுடன்வந்து பசுபதிபாளையம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த கடன் வாங்கிய பெண்ணின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை வழிமறித்து அவர்களது இருசக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டு, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சாதியின் பெயரைப் பயன்படுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கணவரின் கண் முன்னே அவரது மனைவியை பாலியல் ரீதியான தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் கரூர் அரசு மருத்துவக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் "கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய வாகனத்திற்காக 10 தவணைகளில் மொத்தம் 8 தவணைத் தொகையைச் செலுத்திவிட்டோம். இருப்பினும் மீதமுள்ள 3000 ரூபாய்க்கு கட்டவில்லை என கூறி கடனில் தொடர்பில்லாத தன்னுடைய மகன் மற்றும் மருமகளை பொது பொது இடத்தில் வைத்து தக்கியுள்ளனர்.
மேலும் ஒரு பெண் என்று கூட பாராமல் தொடக்கூடாத இடத்தில் தொட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சாதியின் பெயரைச் செல்லி கேவலப்படுத்தி உள்ளனர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடரும் குற்ற சம்பவங்கள்:கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெற்ற கடனுக்காக பொது இடத்தில் பெண்ணை அடித்து உதைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இதேபோன்று நிதி நிறுவனத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதுடன். பணம் செலுத்தவில்லை என கூறி பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கரூர் மாவட்டத்தில் பட்டியலின பெண்களை குறிவைத்து பொது இடத்தில் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துவது கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை உடணடியாக கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரும் கரூர் மாவட்ட காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயில வேண்டும்" - வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்!