கரூர்: மநீம கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் கரூர் பேருந்து நிலையம், ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'அக்கறையற்றப் போக்கு' - அரசை விமர்சித்து மநீம ஆர்ப்பாட்டம் - கரூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மநீம கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
MNM protests against petrol price
பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் கரூர் மாவட்டத் துணைச் செயலாளர் அசோகன், நகரச் செயலாளர்கள் கண்ணன், சக்திவேல், அருணகிரி, ஒன்றியச் செயலாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஒன்றிய அரசின் அக்கறையற்றப் போக்கினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும் பொதுமக்கள் மீது வரி மேல் வரியை அதிகரித்துவருகிறது எனப் போராட்டாக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.