கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலாவுடன் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.
பின்பு காந்தி கிராமம் பகுதியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று கரோனா வைரஸ் நோயாளிகள் பிரிவு மாதிரி படுக்கைகளை ஆய்வுசெய்தனர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறியதாவது, “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் இன்னும் தீவிரமாக வேண்டும் குறிப்பாக காய்கறிச் சந்தையில் சுங்கம் வசூலிக்கப்பட்டுவருகின்றது, சுங்கம் அதிகம் வசூல்செய்பவர்கள் உரிமத்தை ரத்துசெய்யாமல் அவர்களுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.