கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 205 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் - போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர்: பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக் கணினிகளை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
laptop
இந்நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் சூரிய பிரகாஷ், கோட்டாட்சியர் சந்தியா, கிருஷ்ணராயர் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.