தமிழ்நாடு முழுவதும் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 15) துவங்கியது. இதனை அந்தந்த தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் துவக்கிவைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதே போல் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அவரை வரவேற்று திமுகவினர் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை நடத்தினர்.
தனது காரில் இருந்து இறங்கிய செந்தில்பாலாஜியிடம் அங்கு திரண்டிருந்த திமுகவினர் பொருட்களைக் கொடுத்து நிகழ்ச்சியை துவங்கி வைக்க கூறியுள்ளனர். ஆனால் அவர் அதனை வாங்க மறுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்குச் சென்றார்.
மேடையில் பேசிய அவர், "இது கரோனா காலம் என்பதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக 10 நபர்களைத் தவிர மற்றவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட அனைவரும் கலந்து செல்லுங்கள். ஒரே இடத்தில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறோம். நாமே அந்த விதிமுறைகளை மீற கூடாது.