தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி பேருந்து சேவை- தொடங்கி வைத்த அமைச்சர்! - மாவட்ட ஆட்சியர்

கரூர்: சென்னையை அடுத்து தமிழ்நாட்டில் முதல்முறையாக கரூரில் இரண்டு வழித்தடங்களில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மினி பேருந்து சேவை
மினி பேருந்து சேவை

By

Published : Sep 23, 2020, 1:10 PM IST

கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரிக்கு பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புலியூர்வரை இரண்டு வழித்தடங்களில் அரசு மினி பேருந்து இயக்கப்பட உள்ளது.

மினி பேருந்து சேவை

இதனை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து திறந்து வைத்தார். உடன் கரூர் மாவட்ட ஆட்சியரும் இருந்தார்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், மருத்துவக் கல்லூரி, காந்தி கிராமம், வழியாக புலியூர் வரையும் அதேபோல் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பழைய அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பசுபதிபாளையம், அரசு மருத்துவக் கல்லூரி, காந்தி கிராமம் வழியாக புலியூர் என இரண்டு வழித்தடங்களில் இந்த மினி பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பயணியர் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘மத்திய உள்துறை செயலரை சந்தித்து கரோனா நிதி கேட்கவுள்ளோம்’ - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!

ABOUT THE AUTHOR

...view details