ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக கரூர் பசுமை நண்பர்கள் இயக்கம் சார்பில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது. ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் உள்ள ஆண்டாங்கோயில் புதூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். முதல் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
1 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு!
கரூர்: ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
vijaya baskhar
உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை பசுமை நண்பர்கள் இயக்கம் கையில் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து மரங்களை பராமரிக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.