கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்கும் விதமாக எஸ்.பி சசாங் சாய் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 04) கரூர் நாமக்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 120 மதுபாட்டில்கள் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து லாரியிலிருந்த ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சொரிபாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைதுசெய்த காவல் துறையினர், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பாட்டில்களையும் பறிமுதல்செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.