கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தின் எட்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தின் தலைவர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஸ்வகர்மா சமுதாயம் இந்நாட்டை ஆளும் நிலையை ஏற்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
'ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர் ஆக்குவோம்' - கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர்! - விஸ்வகர்மா சமுதாயம்
கரூர்: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர் ஆக்குவோம் என கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Artisans Association Sivakumar
அத்துடன் வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதலமைச்சராக வேண்டும். அதற்கான களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் முதலமைச்சராக முடியாது. அத்தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சராக்கியே தீருவோம்" என்றார்.
இதையும் படிங்க: அனைத்து கட்சிகளும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம் - சவால் விடும் அமைச்சர்!