கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித தெரசாள் ஆலயத்தில் 90ஆவது திருவிழா இன்று பங்குத்தந்தை ஜெபஸ்டின் தலைமையில் நடைபெற்றது.
புனித தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - புனித தெரசாள் ஆலயம்
கரூர்: தெரசாள் ஆலயத்தின் 90ஆவது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இத்திருவிழா கொடியேற்றத்தை வேலாயுதம்பாளையம் அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை லாசர் சுந்தரராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இன்றிலிருந்து வரும் பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை 6 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடைபெறும் என ஆலயம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தேர்பவனி இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவில் திருப்பலியில் கலந்துகொள்ள முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.