நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கரூரில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - karur latest news
கரூர்: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக சுய ஆட்சி இந்தியா தோழமை இயக்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய ரவுண்டானா பகுதியில் சுயாட்சி இந்தியா, சாமானிய மக்கள் கட்சி இயக்கங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “பேச்சுரிமை சுதந்திரம் இந்தியாவில் அனைவருக்கும் பொதுவானது, எனவே பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்பதை கண்டிக்கிறோம்” என்ற முழங்கங்களை எழுப்பினார்கள்.
இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கோர முடியாது என பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!