கரூர்:கரூரிலுள்ள தொழிலதிபரான முத்துக்குமார் சமீபத்தில் கரூர் மத்திய கிழக்கு நகரத்தில் இருந்து 1,000 நபர்களுடன் திமுகவில் இணைைந்தார். இதையடுத்து முத்துக்குமாரை அதிமுகவில் சேருமாறு அக்கட்சியினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது கார் ஓட்டுநரான அதிமுகவை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு ரூ. 13 லட்சம் கொடுத்துள்ளதை முத்துக்குமார் திருப்பி கேட்டுள்ளார். தன்னிடம் முத்துக்குமார் பணம் கேட்டு மிரட்டுவதாக மகேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.