கரூர்:கரூர் மாவட்டம் கடவூர் கொள்ளுதணிப்பட்டியை சேர்ந்த ப்ரீத்தி (18) என்ற மாணவி கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த நிலையில், வேங்காம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி மீண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார்.
மாணவி இரண்டாவது முறையாக கடந்த மாதம் நீட் தேர்வு எழுதினார். இன்னும் சில தினங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் , நேற்று(ஆகஸ்ட் 11) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.