கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, மூடப்பட்டது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வருவதைத் தவிர்த்தும், தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மருத்துவ, சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் தவிர வேறு யாரும் வாகனங்களில் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கரூர் பேருந்து நிலையம், மனோகரா கார்னர் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். கரூர் உழவர் சந்தை பகுதியில் பொதுமக்கள் வரத்து குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசல் குறைந்தே காணப்பட்டது.