தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 12:44 PM IST

ETV Bharat / state

கரோனா பீதி: மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கரூர்: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

karur government medical college medical waste panics residents
karur government medical college medical waste panics residents

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறும் அபாயகரமான கழிவு நீரால், அங்கு வசிக்கும் பொதுமக்களும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், நோய் பரவும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், வாய்க்காலில் வெளியேற்றப்பட்ட கழிவு நீரை குடித்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், கல்லூரி முதல்வரை சந்தித்து குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற வேண்டாம் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து மருத்துவக் கழிவு நீர் குடியிருப்புப் பகுதியில் வெளியேற்றப்படுகிறது எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று (மே 19) புகார் மனு அளித்தனர்.

அதில், "மருத்துவக் கழிவு நீரால் காந்தி கிராமம், ஈபி காலனி, முத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பாதாள சாக்கடையில் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க... அபாயகரமான மருத்துவக் கழிவுகள்: மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கொட்டப்படும் அவலம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details