கரூர் ஆதி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் சுசீலா (55). இவரது கணவர் சிவானந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இதையடுத்து அரசு வழங்கும் விதவை உதவித் தொகை பெற சுசிலா விண்ணப்பம் செய்துள்ளார். இதில், விண்ணப்பதாரரின் வயது மற்றும் உடல் நலத்தகுதி குறித்து மருத்துவர் சான்று பெற்று விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மருத்துவர் கையெப்பத்திற்காக சுசிலா இன்று கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஒவ்வொரு மருத்துவராக சென்று கையெழுத்து கேட்டுள்ளார்.
கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் மீது புகார் - Widow girl application torn Karur
கரூர்: விதவை உதவித் தொகை விண்ணப்பத்தில் கையெழுத்திட முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை அரசு மருத்துவர் கிழித்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மருத்துவர்கள் சுசிலாவுக்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். பிறகு ஒரு வழியாக புவனேஸ்வர் என்ற மருத்துவரிடம் கையெழுத்து வேண்டும் என கேட்டுள்ளார். கையெழுத்திட மறுத்த அவர், விண்ணப்ப படிவத்தை பிடுங்கி துண்டு துண்டாக கிழித்து தூக்கி எறிந்துள்ளார். அதேசமயம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வில் இருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சுசிலா, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுசீலா கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவன் இறந்து விட்டார். விதவை உதவித் தொகை கோரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இன்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவரிடம் சான்றொப்பம் பெற வந்திருந்தேன். மருத்துவர்கள் எனக்கு உரிய பதிலளிக்காமல் அலைக்கழித்ததோடு, எனது விண்ணப்பத்தையும் கிழித்துள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு: 20 கோடி ரூபாய் பறிமுதல்