கரூர்: வெள்ளியணை ஊராட்சி மணவாடி கிராமம் அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வந்த தங்கராஜ். இவர் மகன் ரங்கநாதன் என்பவருக்கும் கரூர் ராயனூர் தில்லை நகரில் வசித்து வந்த தேவராஜ் குடும்பத்திற்கும் இடையே தில்லை நகரில் உள்ள நிலம் ஒன்றைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வாய்த் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சொத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என தேவராஜின் மகன்கள் பார்த்திபன், கௌதம், பிரவீன் ஆகிய மூவரும் மணவாடி ரெங்கநாதனை மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இரவு வெள்ளியணை அருகே உள்ள மணவாடி கிராமத்தில் ரங்கநாதன் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, ரெங்கநாதன் வீட்டுக்குள் அரிவாளுடன் தேவராஜ் மகன்கள் மூவர் ரெங்க நாதனை சரமாரியாக வெட்டி சாய்தனர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ரெங்கநாதனின் மனைவி தீபிகாவை மூவரும் கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ரங்கநாதனின் தந்தை தங்கராஜ் உடன் பிறந்தவரான தேவராஜின் மகன்கள் ராயனூர் தில்லை நகரைச் சேர்ந்த பார்த்திபன்(28) மற்றும் கௌதம் என்கிற விக்னேஷ்(28) ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.